Prabanjan karuppusamy
Wednesday, June 9, 2021
Tuesday, May 11, 2021
செந்நாய்
புகைப்படம் பிரபஞ்சன்
தமிழ்
இலக்கியங்களில் பாலை நிலத்திற்குரிய கருப்பொருள்களுள் செந்நாயும் ஒன்று இதனைப் பற்றி தமிழிலக்கியங்கள் குறித்துள்ளன. பாலை நிலத்தில் வேட்டையாடித் திரியும் செந்நாய், மணலைக்கிளறி தண்ணீர் குடித்து விட்டு போகும் என குறுந்தொகை கூறுகிறது.
குறுந்தொகைதொகு
- வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
- குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
- வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
- வருகதில் அம்ம தானே
- அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.[6]
- குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை
- பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் [7]
- வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
- குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
- வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
- வருகதில் அம்ம தானே
- அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.[6]
- குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை
- பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் [7]
நற்றிணைதொகு
- 1.ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
- ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
- அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்[8]
- 2.களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து
- பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்
- பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்[9]
குறுந்தொகையில் 141:6 பாடலும் மலைபடுகடாம் 338ஆம் பாடலிலும் கலித்தொகையில் 83:1.என வரும் வரிகளிலும் இதனை அறியலாம்.
தொகு
- 1.ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
- ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
- அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்[8]
- 2.களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து
- பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்
- பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்[9]
செந்நாய் குழுவாக வாழும் ஒரு விலங்கு. இவை தம் குழுவில் வாழும் உறுப்பினர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மிகவும் கட்டுக்கோப்பான 5 முதல் 12 உறுப்பினர்களை கொண்ட குழுக்களாக வாழும் தன்மையை உடையவை. சில நேரங்களில் ஒரு குழு மற்றொரு குழுவுடன் இரு குழுக்களின் நன்மைகளுக்காக நட்பு பேணும். சூழ்நிலைக் காரணங்களே குழுக்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கின்றது. மிகவும் அதிகப்படியாக 40 செந்நாய்களைக் கொண்ட குழுக்கள் காணப்பட்டுள்ளது. இவை இரண்டு அல்லது மூன்று குழுக்கள் சேர்ந்து இருந்ததிருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த (7-8 வயது) செந்நாய்கள் குழுக்களில் இருந்து சில காலம் விலகி இருப்பதும் உண்டு. ஒரு குழுக்குள் வாழும் உறுப்பினர்களிடையே சண்டைகள் வருவதில்லை. ஏனெனில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒவ்வொரு பணி இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் ஒரு ஆண், பெண் செந்நாய் இருக்கும். பெரும்பாலும் அவை மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஓய்வு நேரங்களில் குழுவில் உள்ள செந்நாய்கள் அனைத்தும் விளையாடும். குழுவில் இருந்து விலகும் ஒரு பெண் உறுப்பினரால் ஒரு குழு இரண்டாகப் பிரிகின்றது. குழுவில் வாழும் ஒவ்வொரு உறுப்பினரும் அக்குழுவின் வாழ் எல்லைக்குள் குறிப்பிட்ட ஒரு இடத்தைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும். இக்கழிப்பிடம் ஒரு குழுவின் வாழ் எல்லை மற்றொரு குழுவுக்கு உணர்த்தவும் உதவுகிறது.
ஊனுண்ணி விலங்கான செந்நாயின் உணவு பலதரப்பட்ட முதுகெலும்புள்ள, முதுகெலுப்பில்லாத விலங்குகளால் ஆனவை. இவற்றின் உணவு வண்டுகள், கொறிணிகள், பறவைகள், குளம்பிகள் போன்ற விலங்குகள் ஆகும். மற்ற கொன்றுண்ணி விலங்குகளைப் போல செந்நாயும் சில நேரங்களில் புற்களையும் இதர தாவரங்களையும் அரிதாக உட்கொள்கிறது. இவை பெரும்பாலும் 40 முதல் 50 கிலோ எடையுள்ள குளம்பிகளான புள்ளி மான், கடத்தி மான் போன்றவற்றை வேட்டையாடி உண்கின்றன. இவை சில வேளைகளில் இறந்த விலங்குகளின் உடல்களையும் உண்பதுண்டு.
முதுமலை காட்டு விலங்கு உய்விடத்தில் செந்நாயின் எச்சங்களை ஆய்வு செய்த பொழுது கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளும் அவற்றின் விழுக்காடும்
செந்தாயின் எச்சத்தில் காணப்பட்ட விலங்கு | சதவீதம் |
---|---|
புள்ளி மான் | 41 - 70 % |
கடத்தி மான் | 22 - 23% |
கால்நடைகள் | 4 - 15% |
முயல்கள் | 3 - 20 % |
செந்நாய்கள் 10 முதல் 30 உறுப்பினர்கள் கொண்ட குழுவாகச் சேர்ந்து வேட்டையாடும். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் வேட்டையாடும் பொழுது ஒரு குறிப்பிட்ட இடமும் வேலையும் தரப்படுகிறது. அவை இரையை பின்புறம் இருந்து துரத்துதல், பக்கவாட்டில் துரத்துதல், இரையின் மேல் பாய்தல் போன்றவையாகும். இவை பெரும்பாலும் வேட்டையாடி உண்டாலும் சில சமயம் வேறு விலங்கு வேட்டையாடிய இரையைத் திருடுவதும் உண்டு.
- செந்நாய் சீழ்க்கை, அலறல், குழந்தை கத்துதல் போன்று பல விதமான ஒலிகளை எழுப்பவல்லது.
- இவை சில சமயம் 40 உறுப்பினர்களுக்கு மேல் கொண்ட குழுக்களாகக் காணப்படும்.
- குழுவில் உள்ள ஒரு செந்நாய் மற்றொரு செந்நாய்க் குட்டியை பாதுகாக்கவும் உணவளிக்கவும் செய்யும்.
- செந்நாய் தன்னை விட பத்து மடங்கு அதிக எடையுள்ள இரையையும் தாக்கும். எடுத்துக்காட்டாக ஒரு குழு சேர்ந்து புலியையும் கொன்று தின்னும்.
- செந்நாய், வெப்பநிலை மழைக்காடுகள், வறண்ட இலையுதிர் காடுகள், குளிர்ந்த உயர் மலை காடுகள், திறந்த சமவெளி போன்ற வாழிடங்களில் வசிக்கக் கூடியது.
- இவை சுமார் 2.3 மீட்டருக்கும் (7.5 அடிகள்) மேல் எம்பிக் குதிக்கவல்லன.
- இதன் பல் வரிசை அமைப்பு நாய்க் குடும்பத்திலேயே தனித்தன்மை வாய்ந்தது.
- மிகச் சிறப்பாக நீந்த வல்லது. பெரும்பாலும் தன் இரையை நீருக்குள் வரவழைத்து, பின் வேட்டையாடும்.
- இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழும் இந்த வகை நாய் ஒன்று ஒரே நேரத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது.
Saturday, May 1, 2021
காதலும் இருவாட்சியும்
பறவைகளின் காதலை எந்தப் புனைவும் இல்லாமல் எழுதவேண்டுமானால் இருவாச்சி பறவையை பற்றித்தான் எழுதவேண்டும். இரைத் தேடுவதில் ஆரம்பித்து இளைப்பாறுவது வரை எங்குச் சென்றாலும் ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்தே செல்கின்றன. காதலாகி கருவாகிற இனப்பெருக்க காலத்தில் இருபறவைகளும் அடர்வனத்தில் இருக்கிற மரக்கூடுகளை தேடி அலையும். இயற்கையாக இருக்கும் மரப்பொந்துகள்தான் இப்பறவைகளின் கூடு.
தலைவன் தலைவியை பிரிகிற இந்த இனப்பெருக்க காலத்தில் பெண் பறவை தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மரப்பொந்துக்குள் போய்விடுகிறது. கூட்டுக்குள் போகின்ற பெண் பறவை தன் இறகுகளை உதிர்த்து மெத்தை போல செய்துகொள்கிறது. ஆண் பறவை, பெண் பறவை இருக்கிற பொந்தை தன்னுடைய எச்சில், ஈரமான மண் மற்றும் மரச்சிதைவுகளைக் கொண்டு மூடி விடுகிறது. உணவு கொடுப்பதற்கு மட்டும் சிறு துவாரம் ஒன்றை உருவாக்குகிறது. இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை இரை தேடிச் சென்றுவிடுகிறது. பெண் பறவை சிறகுகளை இழந்து, தன்னுடைய இயற்கைப் பொலிவை இழந்து வயிற்றில் முட்டையுடன் இனப்பெருக்கத்துக்குக் காத்திருக்கிறது. இரை தேடி திரும்புகிற ஆண் பறவை தன் அலகுகளுக்குள் சேமித்து வைத்திருக்கிற உணவை அந்தக் கூட்டின் துவாரம் வழியாகப் பெண் பறவைக்கு ஊட்டிவிடுகிறது.
மற்ற காலங்களில் பழங்கள் பூச்சிகள் என உண்ணும் பெண் பறவை இனப்பெருக்க காலத்தில் மற்றப் பறவைகளின் குஞ்சுகள், சிறு பிராணிகளை உணவாகக் கொள்கிறது. தலைவியைப் பிரிந்த தலைவன் இனப்பெருக்ககாலத்தின் எல்லா நாள்களிலும் கூடு இருக்கிற மரத்திலேயே தங்கியிருக்கும். இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் வரை இடுகின்ற பெண்பறவை ஏழு வாரங்கள் வரை அதை அடைகாக்கிறது.
முட்டையில் இருந்து குஞ்சிகள் வெளி வருகிற வரை தாய்ப்பறவைகளின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. குஞ்சுகள் பிறந்ததும் கூடை உடைக்கிற ஆண் பறவை, பெண் பறவையை வெளியே கொண்டுவருகிறது. இரண்டு மாதங்களாகக் கூட்டுக்குள் அடைந்து கிடக்கிற பெண் பறவைக்கு பறக்கிற ஆற்றல் குறைகிறது. ஏற்கெனவே இறகுகளை இழந்த பறவை பத்திலிருந்து இருபது நாள்களுக்குப் பறப்பதற்கு சிரமப்படுகிறது. அக்காலங்களில் ஆண் பறவை குடும்பத்துக்கான உணவைக் கொண்டு வந்து கொடுக்கிறது. அப்போது இப்பறவைகள் தவளை, ஓணான், சிறிய வகை பாம்புக் குட்டிகள் போன்றவற்றை உணவாகக் உட்கொள்கின்றன. தனித்துப் பறக்கிற காலம் வரும் வரை தாய்ப்பறவைகளின் பராமரிப்பில் குஞ்சுகள் வளர்கின்றன. அன்பிருக்கிற இடங்களில் ஆபத்தில்லாமல் இல்லை. இரைதேடி செல்கிற ஆண் பறவை ஒருவேலைக் கூடு திரும்பவில்லை என்றால் கூட்டில் இருக்கிற பெண் பறவை உயிர் விடுவதைத் தவிர வேறு வாய்ப்பே இல்லை. குஞ்சுகளோடு இருக்கும்போது இது நிகழ்ந்தாலும் முடிவு மரணம் மட்டுமே.
இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" Horn bill என அழைக்கிறார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஹெலிகாப்டர் பறப்பதைப் போல இருக்கும். அதேபோல ஒலி எழுப்பக்கூடியவை. பெரிய அலகை உடையவை. அலகுக்கு மேலே கொண்டை போன்ற அமைப்பு இருக்கும். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது. உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சிகள் இருக்கின்றன. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகள், அருணாசலப்பிரதேசம், அந்தமான் தீவுகள், நேபாளம் ஆகிய இடங்களில் வாழ்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன. தென்னிந்தியாவில் 4 வகை இருவாச்சிகள் காணப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படும் நான்கு வகை இருவாச்சிப்பறவைகள் பெரும்பாத இருவாட்சி, மலபார் இருவாட்சி , சாம்பல் நிற இருவாட்சி . கேரள மாநிலத்தில் இருவாச்சியை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர்.
Tuesday, November 24, 2020
Monday, August 31, 2020
Sunday, February 2, 2020
Great hornbills are arboreal and live mainly in wet, tall, evergreen forests. Old-growth trees that extend beyond the height of the canopy a...

-
பறவைகளின் காதலை எந்தப் புனைவும் இல்லாமல் எழுதவேண்டுமானால் இருவாச்சி பறவையை பற்றித்தான் எழுதவேண்டும். இரைத் தேடுவதில் ஆரம்பித்து இளைப்பாறுவத...